dinamalar telegram
Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.584 உயர்வு

Share
சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 584 ரூபாய் உயர்ந்தது. சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4,454 ரூபாய்க்கும்; சவரன் 35 ஆயிரத்து 632 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 66.30 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், நேற்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு 73 ரூபாய் உயர்ந்து 4,527 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு அதிரடியாக 584 ரூபாய் அதிகரித்து 36 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனையானது.

இதையடுத்து, நீண்ட நாட்களுக்கு பின் சவரன் தங்கம் விலை மீண்டும் 36 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. வெள்ளி கிராமுக்கு, 1.10 ரூபாய் உயர்ந்து 67.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ''சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதுடன், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இதனால், உள்நாட்டில் தங்கம் விலை அதிகரித்துள்ளது,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement