dinamalar telegram
Advertisement

மாயக்கண்ணாடி தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி: ஒருவர் கைது

Share
பெரியகுளம் : தேனி அருகே உப்புக்கோட்டையை சேர்ந்தவர் அரசமுத்து 39. நண்பர் திவாகர் 26. இருவரும் கும்பகோணத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரிடம், ''தங்களிடம் ரூ.1 லட்சம் மதிப்பிலான மாயக்கண்ணாடி உள்ளது. இதை அணிந்தால் எதிரே நிற்பவரே ஆடையின்றி பார்க்க முடியும்'' என்றனர். இதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, மாடு வாங்குவது போல் பெரியகுளத்துக்கு யுவராஜ், நண்பர்களாக மதன், சீனிவாசன், வரதராஜனுடன் வந்தார். பெரியகுளம் சுடுகாடு அருகே அரசமுத்து, திவாகரை சந்தித்தனர். 70 ஆண்டுக்கு முன் பயன்படுத்திய கண் கண்ணாடியை கொடுத்தவர்கள் ரூ.1 லட்சத்தை பெற்றனர். யுவராஜ் கண்ணாடியை அணியவே ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதற்கிடையே திவாகர் பணத்துடன் ஓடிவிட்டார். அரசு முத்து அவர்களிடம் மாட்டி கொண்டார்.வடகரை இன்ஸ்பெக்டர் மீனாட்சி, அரசமுத்துவை கைது செய்தார். திவாகர் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் பறிமுதலான நிலையில் அவரை போலீசார் தேடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement