dinamalar telegram
Advertisement

6.89 லட்சம் தடுப்பூசி தமிழகம் வருகை

Share
Tamil News
சென்னை : மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு, 6.89 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையை தடுப்பதற்காக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து உள்ளது. இதற்காக, மத்திய தொகுப்பில் இருந்து, மாதத்திற்கு ஒரு கோடிக்கு மேலான தடுப்பூசிகள் ஒதுக்கப்படுகின்றன.

அந்த அடிப்படையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து, 6 லட்சத்து 89 ஆயிரத்து 180 கோவிஷீல்டு தடுப்பூசிகள், விமானம் வாயிலாக நேற்று சென்னை வந்தன. தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில், மாநில மருந்து கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அந்த தடுப்பூசிகள், தேவையான மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement