dinamalar telegram
Advertisement

கோவில் மேம்பாட்டிற்கு பா.ஜ., ஒத்துழைக்கும்

Share
Tamil News
சென்னை : தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:கோவில் சொத்துக்கு உரிமையாளர், அந்தந்த கோவில்களில் உள்ள இறைவனே என்பது சட்டம். தங்க நகைகளை உருக்கி, டிபாசிட் செய்வதில் கிடைக்கும் வட்டித் தொகை, மாநிலம் முழுதும் உள்ள நலிவடைந்த கோவில்களின் திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று, ஏற்கனவே அமைச்சர் தெரிவித்திருந்தார்.

தற்போது, கோவில் நகைகள் வாயிலாக கிடைக்கும் வருவாய், அந்தந்த கோவில்களின் திருப்பணிகளுக்கே பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துஉள்ளது.அரசின் இந்த மனமாற்றத்திற்கு காரணம், தமிழக பா.ஜ., முன்னெடுத்த கடும் ஆட்சேபனையும், தொடர் போராட்டமும் தான் என்பது தெளிவாகிறது.கோவில்களின் மேம்பாட்டிற்கு அரசு எடுக்கும் நியாயமான, சட்ட ரீதியான முயற்சிகளுக்கு பா.ஜ., என்றைக்கும் ஒத்துழைப்பை நல்கும்.இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement