dinamalar telegram
Advertisement

போலீசார் இடமாறுதல்; டி.ஜி.பி., எச்சரிக்கை

Share
Tamil News
மதுரை : 'போலீசாருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கினால், ஒரு வாரத்திற்குள் அதை அமல்படுத்த வேண்டும். கவனக்குறைவாக இருந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.


நெல்லையில் தொடர் கொலைகளால், வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடலுார் போலீஸ்காரர் அலெக்ஸ் ஜாய்ஸ், பாபநாசம் அணை பாதுகாப்பு பணியில் உள்ளார்.கடந்த மாதம், பிறந்து இறந்த குழந்தைக்காக சடங்கு செய்ய இவர் விடுப்பு கேட்டார். தேர்தல் பணியை காரணம் காட்டி விடுப்பு தரவில்லை. இதனால், விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்யப்போவதாக ஆடியோ வெளியிட்டார். இது, வேகமாக பரவியதை தொடர்ந்து, அவருக்கு உடனடியாக விடுப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு, மூன்று மாதங்களுக்கு முன், கடலுாருக்கு இடமாறுதல் வழங்கியும், அதிகாரிகள் அமல்படுத்தவில்லை.

இந்நிலையில், அனைத்து பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கும், டி.ஜி.பி.,சைலேந்திரபாபு அனுப்பிய சுற்றறிக்கை: இடமாறுதல் வழங்கப்பட்டும், பணியாற்றும் இடத்தில் இருந்து விடுவிக்கப்படாமல் இருப்பது விரும்பத் தகுந்தது அல்ல. தலைமை அலுவலகத்தில் இருந்து வரும் உத்தரவுகள் தவிர, ஐ.ஜி., - டி.ஐ.ஜி., அலுவலக உத்தரவுகள் உடனடியாக அமல்படுத்தப்படுவது இல்லை.

எனவே, இடமாறுதல் உத்தரவுகளை, ஒரு வாரத்திற்குள் அமல்படுத்த வேண்டும். இதில் ஏதேனும் நிர்வாக சிக்கல் இருந்தால், அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். கவனக்குறைவாக இருந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement