dinamalar telegram
Advertisement

23 மீனவரை விடுவிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Share
Tamil News
சென்னை : 'இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள, 23 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட மீனவர்கள், 75க்கும் மேற்பட்ட படகுகளில், வங்கக் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர்.கோடியக்கரை பகுதியில், அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள், 23 பேரை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல்களை, இந்தியா ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், பாதுகாப்பாக கரை திரும்புவதை உறுதி செய்யும் வகையில், இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட, 23 மீனவர்களை உடனே விடுதலை செய்வதற்கும், அவர்களின் மூன்று படகுகளை மீட்டுத்தரவும், மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement