dinamalar telegram
Advertisement

அனைத்து வயதினரையும் பாதிக்கும் பார்வை குறைபாடு: கருத்தரங்கில் தகவல்

Share
மதுரை -'பார்வை குறைபாடு அனைத்து வயதினரையும் பாதிக்கிறது,' என, மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனை, கண் டாக்டர்கள் சங்கம் சார்பில் நடந்த உலக பார்வை தின விழா விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.இதையொட்டி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கண் மருத்துவமனை வரை விழிப்புணர்வு டூவீலர் பேரணி நடந்தது. கூடுதல் எஸ்.பி., தங்கத்துரை துவக்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் அனீஷ்சேகர் துவக்கி வைத்தார். கண் நலன் பாதுகாப்போம் என கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின் நடந்த கருத்தரங்கில் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி கிம் பேசுகையில், ''ஐம்பது வயதிற்கு மேற்பட்டோர் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.பார்வை குறைபாடால் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. கண் குறைபாடுகளுக்கு சிகிச்சை பெறுவதன் மூலம் பார்வையை பாதுகாக்கலாம்,'' என்றார். டாக்டர் கிருஷ்ணதாஸ் நன்றி கூறினார். பி.ஆர்.ஓ., ராமநாதன், மேலாளர்கள் மீனாட்சிசுந்தரம், சரவணன், சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement