dinamalar telegram
Advertisement

செய்திகள் சில வரிகளில்....

Share
பொறுப்பேற்புமதுரை: மதுரை மாநகராட்சி கல்வி அதிகாரியாக ஆதிராமசுப்பு பொறுப்பேற்றார். இங்கிருந்த விஜயா, மதுரை கல்வி மாவட்ட அலுவலராக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார்.அரசு பஸ்கள் இயக்கப்படுமாமதுரை: மதுரையில் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர் தலைமையில் மீனாம்பாள் புரம் குடியிருப்போர் கலெக்டர் அனீஷ்சேகரிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது: பெரியார் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து மீனாம்பாள்புரம் வழியாக ஏற்கனவே ஆனையூர், குலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது ஒரே ஒரு பஸ் மட்டும் குலமங்கலத்திற்கு இயக்கப்படுகிறது. மீனாம்பாள்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியினருக்காக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கூறியுள்ளனர்.சிறப்பு சொற்பொழிவுமதுரை: மதுரை ஸ்டார் ரோட்டரி கிளப் சிறப்பு கூட்டம் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், 'மகாத்மாகாந்தி ஒரு பார்வை' என்ற தலைப்பில் பேசினார். ஆடிட்டர் சேதுமாதவா, ஓய்வு பெற்ற நீதிபதி மாயாண்டி, பி.ஆர்.ஓ., நெல்லை பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement