dinamalar telegram
Advertisement

படிக்கட்டு பயணத்தில் மாணவர்கள்

Share
அலங்காநல்லுார்-அலங்காநல்லுாரில் இருந்து மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிக்கும் அவலம் உள்ளது.சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வாடிப்பட்டி, மதுரையில் உள்ள பள்ளிகளுக்கு தினமும் ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர். குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்படுவதால் பள்ளிகள் முடிந்து காத்திருக்கும் மாணவ-ர்கள் சமூக இடைவெளியின்றி பஸ்களில் பயணிக்கின்றனர். இலவச பயணம் என்பதால் பெண்களும் ஆட்டோக்களை தவிர்த்து பஸ்களில் செல்வதால் கூட்டம் அதிகம் உள்ளது. எனவே காலை, மாலை பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முன்வர வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement