dinamalar telegram
Advertisement

குன்றத்தில் தேர் பூஜை

Share
திருப்பரங்குன்றம் -திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சரஸ்வதி, ஆயுத பூஜையை முன்னிட்டு 5 மூலவர்களுக்கு சிறப்பு பூஜை முடிந்து உற்ஸவர் சன்னதியில் சூரசம்ஹாரத்திற்கு பயன்படுத்தப்படும் கத்தி, கேடயம் மற்றும் ஓலைச்சுவடிகளுக்கு பூஜை நடந்தது. பின் கோயில்முன் நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய வைரத்தேரிலுள்ள கருப்பணசுவாமி, விநாயகர், சண்முகர், திருக்கல்யாண கோலத்திலுள்ள முருகப்பெருமான், தராசு முருகன், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து தேருக்கு பூஜை நடந்தது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த பூஜைகள் நடக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement