dinamalar telegram
Advertisement

முன் வருமா- ரத்தான பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம்

Share
Tamil News
மதுரை -கொரோனா தொற்று பரவலையடுத்து மதுரை கோட்டத்தில் ரத்து செய்யப்பட்ட ராமேஸ்வரம், கோவை உள்ளிட்ட பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

குருவாயூர் - புனலுார் ரயிலை மதுரை வரை நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரையிலிருந்து ராமேஸ்வரம் மற்றும் பழநி வழியாக கோவைக்கு காலை, மதியம், மாலை என 3 பயணிகள் ரயில்கள் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவலையடுத்து கடந்தாண்டு மார்ச்சுடன் இவை நிறுத்தப்பட்டன.

தொற்று குறைந்ததையடுத்து முக்கிய விரைவு ரயில்கள் இயக்கப்பட்ட போதும், இந்த ரயில்கள் மட்டும் இயக்கப்படவில்லை.தற்போது ராமேஸ்வரத்திற்கு மட்டும் ஒரே ஒரு ரயில் இயக்கப்படுகிறது. அதிலும் பயணிகள் கூட்டம் அதிகம். மேலும் மதுரையில் காலையில் ராமேஸ்வரத்திற்கு புறப்படும் அந்த ரயில் மாலை அங்கிருந்து திரும்புகிறது. கோவை ரயிலை இயக்குவது குறித்து ரயில்வேயிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.குருவாயூரிலிருந்து புனலுாருக்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை மதுரை வரை நீடிக்க வேண்டும் என தமிழகம், கேரள மாநில பயணிகள் நீண்டகாலமாக வலியுறுத்துகின்றனர்.

ஆனால் ரயிலை நீடிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது இந்த வழித்தடத்தில் செங்கோட்டைக்கு மட்டும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.சில நாட்களுக்கு இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் கூறுகையில், 'மாநில அரசு ஒப்புதல் பெற்று பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாநில அரசு ஒப்புதல் தந்ததும் மற்ற ரயில்களும் இயக்கப்படும்,' என்றனர்.பயணிகள் நலன் கருதி மாநில அரசு ரயில்வே நிர்வாகத்துடன் ஆலோசித்து ரத்தான ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement