dinamalar telegram
Advertisement

பிளஸ் 2 முடித்தோர் தொழில் துவங்க ரூ.75 லட்சம் வரை மானியம்; கலெக்டர் முரளீதரன் தகவல்

Share
தேனி--''மாவட்டத்தில் புதிய தொழில் துவங்க பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்'' என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் சார்பில் 21-35 வயது வரையிலான பொதுப்பிரிவினர், 21-45 வயது வரையிலான சிறப்பு பிரிவினர் (எஸ்.சி.எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள்) சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் துவங்க வங்கி கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும், பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தற்போது கல்வி தகுதியை அரசு குறைத்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் இதில் பயன் பெறலாம் அன அதிகபட்ச முதலீட்டு மானியத் தொகையை ரூ.50 லட்சம் முதல் ரூ.75 லட்சமாக உயர்த்தியுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி தொழில் முனைவோரை ஊக்கவிக்க 10 சதவீத கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு https://www.msmeonline.tn.gov.in/needs இணையதளத்திலும், 89255 33998 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement