dinamalar telegram
Advertisement

நிதி நிறுவன நிர்வாகிகள் ரூ.80 லட்சம் மோசடி: குற்றப்பிரிவு விசாரிக்க எஸ்.பி., பரிந்துரை

Share
தேனி-தேனி அன்னஞ்சியில் 'எஸ்.வி.எஸ்.,' என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தில் ரூ.80 லட்சம் மோசடி செய்த வழக்கை குற்றப்பிரிவு விசாரிக்க எஸ்.பி., பரிந்துரைத்துள்ளார்.இந்த நிதி நிறுவனத்துக்கு கடமலைக்குண்டு, உத்தமபாளையத்தில் கிளைகள் இருந்தது. தர்மபுரியை சேர்ந்த கோபி, திருச்சி ரவி, கும்பகோணம் தமிழ்செல்வன், திருநெல்வேலி முகமது ஜாகிர் ஆகியோர் இணைந்து நிறுவனத்தை நடத்தினர். அன்னஞ்சி கிளையில் 58 பேர் பணிபுரிந்தனர்.இவர்கள் தனிநபர் கடன், மகளிர்குழுக் கடன் உள்பட இதர கடன் வழங்க பயனீட்டாளர்களிடம் இருந்து முன்பணமாக ரூ.80 லட்சம் பெற்று நிறுவனத்திடம் வழங்கினர். இந்நிலையில் 58 பேருக்கு சம்பளம் கொடுக்காமல், ரூ.80 லட்சத்துடன் மாயமாகினர். நால்வர் மீதும் நடவடிக்கைகோரி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் முருகன் தலைமையில் பாதிக்கப்பட்ட 35 இளைஞர்கள் எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்ரேவிடம் மனு அளித்தனர். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க அவர் பரிந்துரைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement