dinamalar telegram
Advertisement

விஜயதசமி மாணவர் சேர்க்கை துவக்கம்

Share
தேனி--தேனி அல்லிநகரம் பாக்யா மெட்ரிக் பள்ளியில் சரஸ்வதி சுவாமி சிலைக்கு மாலை அணிவித்து பூஜை நடந்தது. பின் சரஸ்வதி பூஜை, விஜயதசமியை முன்னிட்டு புதிய மாணவர் சேர்க்கை 'வித்யாரம்பம்' நிகழ்வை பள்ளிக் கல்வி சங்க செயலாளர் பாக்கியகுமாரி துவக்கி வைத்தார்.மழலையர் வகுப்பில் சேர்ந்த செல்வன், சிவகிருத்திக், நந்தினி, நிவிஷா, சாய்அஷ்மிதா உள்ளிட்ட சிறுவர், சிறுமிகளின் கையை பிடித்து முதல்வர் பரந்தாமன் அரிசியில், மஞ்சளால் 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை எழுத வைத்தார். விஜயதசமியான இன்றும் சுவாமி பூஜையுடன் அட்மிஷன் நடைபெறும் என துணை முதல்வர் வினோத்குமார் தெரிவித்தார். மேலாளர் கார்த்திகேயன், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement