dinamalar telegram
Advertisement

ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

Share
மூணாறு-மூணாறில் அரசு நிலத்தை ஆக்கிமித்து கட்டிய கட்டடத்தை வருவாய்த்துறையினர் அகற்றினர்.மறையூரைச் சேர்ந்த ஸ்டான்லிமாத்யூ. பல லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டினார். தேவிகுளம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், சிறப்பு தாசில்தார் ரோயி, மூணாறு கிராம நிர்வாக அலுவலர் ஜான்சன் ஆகியோர் தலைமையில் வருவாய்துறையினர் நிலம் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் மண் அள்ளும் இயந்திரத்தை உபயோகித்து அகற்றினர். அதேபோல் ராஜீவ்காந்தி காலனியில் அரசு நிலத்தில் முகேஷ் என்பவர் சுற்றுசுவர் கட்டினார். இதுவும் அகற்றப்பட்டது.சிறப்பு படை: பூஜை விடுமுறையையொட்டி தொடர் விடுமுறை என்பதால், அந்த கால அளவில் சட்டவிரோதமாக மண் நிரப்புதல், மணல் அள்ளுதல், பாறை உடைத்தல், ஆக்கிரமிப்பு, கட்டுமானம், மரம் வெட்டுதல் ஆகியவை நடக்க வாய்ப்புள்ளது. அதனை தடுக்கும் வகையில் தாலுகா வாரியாக வருவாய்துறை சார்பில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.-----------
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement