dinamalar telegram
Advertisement

மாட்டுபட்டி அணையில் நீர் திறப்பு

Share
மூணாறு--கேரளா மூணாறு அருகே மாட்டுபட்டி அணை நிரம்பியதால்ஒரு மதகில் நேற்று நீர் திறக்கப்பட்டது.இடுக்கி மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வரும்பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. மூணாறு உள்பட சில பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. நேற்று காலை 9:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பீர்மேடு தாலுகாவில் 29 மி.மீ., மழை பதிவானது. மிகவும் குறைவாக தொடுபுழா தாலுகாவில் 14.8 மி.மீ., பதிவானது. எஞ்சிய தாலுகாக்களான இடுக்கி 27.2, தேவிகுளம் 17.7, உடும்பன்சோலை 25.6 மி.மீ., மழை பெய்தது.அணை திறப்பு: மூணாறு அருகே மாட்டுபட்டி அணை 162 அடி உயரம் கொண்டது. சமீபத்தில் திறக்கப்பட்ட குண்டளை அணை நீர் இங்கு வந்தது மற்றும் பலத்த மழை ஆகியவற்றால் மாட்டுப்பட்டி அணை நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது. அணையில் ஒரு மதகு நேற்று காலை 11:00 மணிக்கு திறக்கப்பட்டது. கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement