dinamalar telegram
Advertisement

கம்பம்மெட்டு மலைப்பாதையில் லாரி-ஜீப் மோதல் தொழிலாளிகள் 10 பேர் காயம்

Share
கம்பம்--கம்பம்மெட்டு மலைப்பாதையில் நேற்று மாலை ஆறாவது கொண்டை ஊசி வளைவில் லாரி-ஜீப் நேருக்கு நேர் மோதியதில் தோட்ட தொழிலாளர்கள் 10 பேர் காயமடைந்தனர்.தம்பந்தில் இருந்து இடுக்கி மாவட்ட ஏலத்தோட்டங்களுக்கு தினமும் தொழிலாளர்கள் ஜீப்களில் சென்று வருகின்றனர். நேற்று மதியம் கேரளாவில் இருந்து ஜீப் வந்தது. கம்பம்மெட்டு மலைப்பாதை ஆறாவது கொண்டை ஊசி வளைவில் ஜீப்பும் கம்பத்தில் இருந்து கேரளா சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதியது. ஜீப்பில் பயணித்த 10 பேர் படுகாயமடைந்தனர். இதில் உத்தமபாளையத்தை சேர்ந்த மகேஸ்வரி, டிரைவர் பிரபு, லட்சுமி ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். லாரி டிரைவர் துரைசாமிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement