dinamalar telegram
Advertisement

பெரியகுளத்தில் சரஸ்வதி பூஜை

Share
பெரியகுளம்-பெரியகுளத்தில் கோயில்கள், வீடுகள், கடைகளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.பெரியகுளம் சிவசக்தி ஆன்மிகப்பணிக்குழுவினர் பாலசுப்பிரமணியர் கோயிலில் துர்க்கை அம்மனுக்கு அபிேஷகம் நடத்தினர். அமைப்பாளர் ஜெயபாண்டி, செயலாளர் காசியம்மாள், ஒருங்கிணைப்பாளர்கள் ரவிக்குமார், வெங்கடேஷன், கார்த்திக் செய்திருந்தனர்.* நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி நலன் வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. மாணவர்கள் நோட்டு, புத்தகம் வைத்து அர்ச்சனை செய்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணசைதன்யதாஸ், ஸ்ரீ பரத், வேதவியாஸ் செய்திருந்தனர். மாணவர் களுக்கு பூஜை செய்யப்பட்ட பேனாக்கள் வழங்கப்பட்டது. கம்பம் ரோடு காளியம்மன் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன், வடுகபட்டி பகவதியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement