dinamalar telegram
Advertisement

மேகமலை அணைகளில் தேங்கும் தண்ணீர்துாவானம் வழியாக வெளியேற்றப்படுகிறது

Share
சின்னமனுார்--சுருளியாறு மின்நிலையம் செயல்படாததால் மேகமலை பகுதி ைஹவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகளில் தேங்கும் தண்ணீர் துாவானம் வழியாக சுருளி அருவிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.மேகமலை பகுதியில் மின்வாரிய கட்டுப்பாட்டில் ைஹவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் தேங்கும் நீர் சுரங்கபாதை வழியாக இரவங்கலாறு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து குழாயில் சுருளியாறு நீர்மின்நிலையத்து தண்ணீர் கொண்டு சென்று மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த குழாய் சமீபத்தில் சேதமடைந்ததால் சுருளியாறு நீர்மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்து.இதற்கிடையே ஒரு மாதத்திற்கும் மேலாக சாரல் மழை தொடர்கிறது. அணைகளின் நீர் மட்டம் உயர்வது, மின்உற்பத்தி நிறுத்தம் ஆகியவற்றால் வேறு வழியின்றி துாவானம் வழியாக சுருளி அருவிக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement