dinamalar telegram
Advertisement

தொட்டிப்பாலத்தில் விரிசல் உடையும் அபாயத்தால் அச்சம்

Share
கூடலுார்--லோயர்கேம்ப் முல்லை பெரியாற்றின் தலை மதகில் இருந்து 18-ம் கால்வாய்க்கு திறக்கப்படும் தண்ணீர் தம்மணம்பட்டி அருகே தொட்டி பாலம் வழியாக வெளியேறும்.பால துவக்கப்பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் 18 -ம் கால்வாய்க்கு தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பாலம் பலமிழந்து உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 ஆண்டுக்கு முன்பு முல்லை பெரியாற்றில் இருந்து ஒட்டான்குளம் கண்மாய்க்கு நீர் வரும் தொட்டி பாலம் உடைந்தது. இது இன்னும் சரிசெய்யப்படாமல் உள்ள நிலையில் இதையாவது முன்கூட்டியே சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement