22.5 ஏக்கரில் ‛மியாவாக்கி அடர் குறுங்காடுகள்
தேனி-மாவட்டத்தில் பல்லுயிர் பெருக்கத்தை உறுதி செய்ய தலா ஒன்றரை ஏக்கரில் அரசு பள்ளி வளாகங்களில் ‛மியாவாக்கி' அடர் குறுங்காடுகளை உருவாக்கும் திட்டம் உள்ளது. \
மாவட்ட பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழு ஒப்புதலில் முதற்கட்டமாக பெரியகுளத்தில் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன.பெரியகுளம், உத்தமபாளையம், தேனி கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
சமீபத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டமைப்பு, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது, பள்ளி வளாகங்களில் பயன்படாத இடங்களில் ஒன்றரை ஏக்கரை தேர்வு செய்து 40 சதவீத பழவகை கன்று, 40 சதவீத பூ பூக்கும் மரக்கன்று, 20 சதவீத அரிதான மரங்களை நட்டு 2 ஆண்டுகளில் வளர்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.இதுபற்றி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், ‛பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் முதற்கட்டமாக 15 அரசு பள்ளி வளாகங்களில் தலா ஒன்றரை ஏக்கர் வீதம் மொத்தம் 22.5 ஏக்கரில் தனித்தனி மியாவாக்கி அடர்காடுகள் உருவாக்கப்பட உள்ளன.
இந்தப் பணிகள் முடிந்த நிலையில் தேனி, உத்தமபாளையம் கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில் மியாவாக்கி அடர்வனங்கள் உருவாக்கப்படும். குறிப்பாக அறிவியல், தாவரவியல் பாடம் கற்பித்தல் பணியில் மாணவர்களுக்கு நேரடியாக செயல்முறை விளக்கம் அளிக்க இது உதவும். மேலும், சூழல் பாதுகாப்பு, மரங்கள் வளர்ப்பதின் அவசியம் குறித்து மாணவர்கள் அறிய இது முன்னுதாரண திட்டமாகும்.'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!