dinamalar telegram
Advertisement

100 ரூபாயை கடந்தது டீசல்

Share
Tamil News
கடலுார் : தமிழகத்திலேயே முதல் முறையாக, கடலுார் மாவட்டம், குமராட்சியில் டீசல் லிட்டர் 100 ரூபாயை தாண்டி, விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் பெட்ரோல் நேற்று 31 காசுகள் அதிகரித்து, லிட்டர் 102.10; டீசல் லிட்டர் 97.93 ரூபாய்க்கு விற்றது.சென்னையில் இருந்து 190 கி.மீ.,யில் உள்ள கடலுாரில், பெட்ரோல் லிட்டர் 104.16; டீசல் 99.95 ரூபாய்க்கு விற்றது.கடலுார் மாவட்டம்,குமராட்சியில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக டீசல் லிட்டருக்கு 100.29; காட்டுமன்னார்கோவிலில் 100 ரூபாய்க்கும் விற்றது.

தமிழக பெட்ரோல் விற்பனையாளர் சங்கத் தலைவர் முரளி கூறுகையில், ''மத்திய அரசும், மாநிலங்களும் ஒன்றிணைந்து வரியை குறைத்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த முடியும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement