dinamalar telegram
Advertisement

கோயில்களில் சரஸ்வதி பூஜை

Share
ரெகுநாதபுரம்-ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டுமூலவர் வல்லபை ஐயப்பன், விநாயகர், மஞ்சமாதா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குஅஷ்டாபிஷேகம் நடந்தது. கோயில் தலைமை குருசாமி மோகன் , பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்டவை வழங்கி சரஸ்வதி அனுக்கிரக பூஜைகளை செய்தார். அன்னதானம் நடந்தது.இன்று மாலையில் கோயில் வளாகத்தில் வல்லபை ஐயப்பனின் உள்பிரகார வீதியுலாவில் வில், அம்பு எய்தும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தாலுகா அலுவலக கற்பகவிநாயகர், பஸ்ஸ்டாண்ட் விநாயகர் உள்ளிட்ட கோயில்களில் சரஸ்வதி, ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவாடானை, தொண்டியில் ஆட்டோ, வேன் டிரைவர்கள் வாகன ஊர்வலம் சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement