dinamalar telegram
Advertisement

ஆயுதபூஜை

Share
ஆர்.எஸ்.மங்கலம்நவீன வளர்ச்சி காரணமாக பாஸ்ட் புட் உணவுக்கு மாறிவரும் கலாசாரத்தால் உடலில் நவீன காலத்திற்கு ஏற்ப பல்வேறு தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனை வாசலில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையில் தான், இன்று நாம் வாழ்ந்து வருகிறோம்.அடுத்த தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நம்மாழ்வார் காட்டிய இயற்கை பாதையில், ஆர்.எஸ்.மங்கலத்தில் இளைஞர் சோனைராஜ் 36, என்பவர் நடை பயிற்சிக்கு செல்பவர்கள், மாணவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் இயற்கை சிறு தானிய உணவுகளாக கேழ்வரகு புட்டு, கம்பு புட்டு, சிவப்பு அரிசி அவல், தினை, சாமை உள்ளிட்டவைகளின் சுவை மிக்க உணவை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.மேலும் சர்க்கரை, உப்பு நீர், ரத்த சோகை உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்கும் விதமாக நெல்லிக்காய் சாறு, அருகம்புல் சாறு, வெம்பூசணி சாறு, பீட்ருட் மற்றும் கேரட் சாறு, கருவேப்பிலை சாறு, முடக்கத்தான் சூப், முருங்கை கீரை மற்றும் துாதுவளை, வாழைத்தண்டு சூப் வகைகளை உடனுக்குடன் தயார் செய்து கொடுத்து வருகிறார்.பாட்டியம்மா என்ற பெயரிலான கடையில், முளைக்கட்டிய தானியங்களான பச்சை பயறு, கொண்டை, கானப்பயிறு உள்ளிட்ட பல்வேறு இயற்கையான பயறு வகை தயார் செய்து கொடுப்பதுடன், விற்பனை செய்யும் போதே அதன் பயன்கள் குறித்து வாடிக்கையாளர்களிடமும், இளைய தலைமுறையினரிடமும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால், அப்பகுதியினர் இயற்கை உணவுகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இது குறித்து சோனைராஜ் கூறுகையில், ேஹாட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு, வெளிநாடுகளில் பணியாற்றிய நிலையில், நம்மாழ்வாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, இயற்கை உணவுகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் குறித்து இளைய சமுதாயத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இயற்கை உணவுகளின் முக்கியத்துவத்தை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்காகவே இயற்கை உணவுகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறேன். அதிகாலையில் நடை பயிற்சியில் ஈடுபடுபவர்கள், மற்றும் குழந்தைகள் இந்த இயற்கை உணவு முறைக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளனர் என்றார். இயற்கை உணவு தேவைக்கு 77085 21406 என்ற எண்ணில் அழைக்கலாமே...
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement