dinamalar telegram
Advertisement

வல்லுாரில் 1,000 மெகா வாட் நிறுத்தம்

Share
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் வல்லுாரில், மத்திய அரசின் தேசிய அனல் மின் கழகம் மற்றும் மின் வாரியத்தின் கூட்டு அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு, தலா 500 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வல்லுார் மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் நிலக்கரி பற்றாக்குறையால், இம்மாதம் 4ம் தேதி முதல், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று அதிகாலை மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.இதனால், அந்த மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 1,060 மெகா வாட்டிற்கு பதிலாக, குறைந்த மின்சாரமே வழங்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement