dinamalar telegram
Advertisement

தபால்களை கணினி வழி கண்காணிக்கும் திட்டம்

Share
ராமநாதபுரம்-ராமநாதபுரம் தலைமை தபால் நிலையத்தில் தபால்களை கணினி வழி கண்காணிக்கும் புதிய மென்பொருள் திட்ட துவக்க விழா நாளை நடக்கிறது.ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா கூறியதாவது:ராமநாதபுரம் அஞ்சல் கோட்டத்தில் தேசிய அஞ்சல் வாரவிழா அக்.9 முதல் கொண்டாடப்படுகிறது. அக்.16ல் விழா நிறைவடைகிறது. அக்.11ல் அஞ்சலக சேமிப்பு தினத்தில் 5000 புதிய அஞ்சலக கணக்குகள்,100 செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் துவக்கப்பட்டன. அக்.12ல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு தினத்தில் புதிய பாலிசி பத்திரங்கள், காப்பீடு முதிர்வுத் தொகை வழங்கப்பட்டது. புதிதாக 266 பாலிசிகள் பெறப்பட்டு 12 லட்சத்து 85 ஆயிரத்து 613 ரூபாய் பிரிமியம் வசூலிக்கப்பட்டது. 13ல் அஞ்சலக தபால் தலை சேகரிப்பு தினம் மற்றும் வணிக வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் சூரன்கோட்டை, பரமக்குடி பாம்பூரில் சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்தப்பட்டது.நாளை (அக்.16ல்) அஞ்சலக தபால் தினத்தையொட்டி ''நன்யதா'' என்ற புதிய மென்பொருள் சேவை திட்டம் துவக்கப்படுகிறது. இதன் மூலம் தபால் பெட்டிகளில் போடப்படும் தபால்கள் எங்கு உள்ளன என்பதை கணினி வழி கண்காணிக்க முடியும். மாவட்ட அளவிலான வாடிக்கையாளர் சந்திப்பு நடத்தப்படும், என்றார்.--
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement