dinamalar telegram
Advertisement

அதிநவீன உலகமயமாக்கலில் பொறியியல் கல்வி அவசியம்

Share
ராமநாதபுரம்--பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் கல்லுாரிகளுக்கு அடுத்தபடியாக பொறியியல் கல்லுாரியில் அதிகம் சேர்கின்றனர். இதன்காரணமாக அரசு பொறியியல் கல்லுாரிகள் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. அந்தவரிசையில் ராமநாதபுரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியின் செயல்பாடு, படிப்பின் முக்கியத்துவம் குறித்து பல்கலை டீன் ஜெ. ஜெகன் கூறியதாவது: பொறியியல்துறை படிப்பு, அதன்பயன் என்ன ...நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக திகழ்வது பொறியியல் கல்வியே. இன்றைய அதிநவீன உலகமயமாக்கலில் பொறியியற்கல்வி இன்றியமையாததாகும். நவீன தொழில் நுட்பத்தின் அடித்தளமாக உள்ளது. கம்ப்யூட்டர் பயன்பாடு, தகவல் தொழில் நுட்பம், நவீன மருத்துவம், நவீன பசுமை கட்டடங்கள், புதுப்புது இயந்திரங்கள் வடிவமைப்பு, அதி நவீன போக்குவரத்து வாகனங்கள் உற்பத்தி, தடையில்லா மின் பயன்பாட்டிற்கு நவீன மின்உற்பத்தி சாதனங்கள் வடிவமைப்பு என அனைத்து துறைகளிலும் பொறியியல் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பொறியியல் துறை படித்தால் சாதிக்க முடியுமா ... உலகம் காலவரையற்ற சவால்கள், எரிசக்தி நெருக்கடி, காலநிலை மாற்றம் இப்படி பல சிக்கல்களை கொண்டுள்ளது. இதற்கு பயனுள்ள தீர்வுகளை சிறந்த பொறியியற் வல்லுநர்களாலேயே தரமுடியும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்பவர்கள் பொறியியலாளர்களே. அவர்களால் புதுப்புது கண்டுபிடிப்புகளின் மூலம் சுற்றுச்சுழலை பாதிக்காதபடி பசுமையாகவும் பாதுகாப்பாகவும் அமையும் வாகனங்களுக்கான தொழில் நுட்பத்தை கண்டறிய முடியும். கடலில் மேல்பாலம் அமைத்தல் ,பூகம்பத்தால் பாதிக்காதவண்ணம் பல அடுக்குமாடி கட்டடங்களை கட்டுதல் என அதற்கான தொழில் நுட்பங்களை கண்டறிதல் இப்படி தினசரி நாம் பயன் படுத்தும் அனைத்து பொருட்களுமே ஏதோ ஒரு பொறியிலாளரின் கண்டுபிடிப்பில் உருவானதே. கிராமப்புற மாணவர்களுக்கு சலுகை உண்டா ... ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம் ரோடு புல்லுங்குடியில் அண்ணா பல்கலை பொறியியற் கல்லூரி உள்ளது. உற்சாகமாகவும் உத்வேகத்துடன் பயிலும் சுற்றுச்சுழலை உருவாக்கியுள்ளோம். சிறப்பான கல்வியை வழங்க அனுபவமிக்க மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் உள்ளனர். பின்தங்கிய மாவட்டம் என்பதால் கிராமப்புற மாணவர்களுக்காக எங்கள் கல்லூரியில் மட்டுமே இயந்திரவியல் மற்றும் கட்டடவியல் துறைகளில் தமிழ் வழிக்கல்வியில் பயிற்றுவிக்கப்படுகிறது. கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெறும் அளவிற்கு நவீன மொழி பயிற்சி ஆய்வகம் உள்ளது. படிப்பில் சராசரியாக உள்ள மாணவர்களுக்கு மாலையில் இலவசமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. விடுதிகள் எத்தனை உள்ளன, வசதிகள் பற்றி ... மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதிகள் உள்ளன. இங்கு தங்கிப்படிப்போருக்கு 24 மணிநேரமும் இணைய வசதியை பயன்டுத்திக்கொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வளாகத்தில் உள்ள நூலகங்கள் மற்றும் ஆய்வகங்களை மற்ற நேரங்களிலும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். மூன்றாம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே அண்ணா பல்கலையின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்கும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககத்தின் மூலம் அவர்களுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கு பெறும் மாணவர்கள் தொழில் முனைவோர்களாகவோ, மென்பொருள் பொறியியலாளர்களாகவோ இறுதி ஆண்டு படிக்கும் காலத்திலேயே பணிநியமன ஆணை பெறுகின்றனர்.எந்தத் துறை அதிகம் விரும்பப்படுகிறது...முன்னர் இயந்திரவியல் மற்றும் கட்டடவியல் துறை படிப்புகளை அதிகளவில் மாணவர்கள் விரும்பி எடுத்தனர். சமீபத்தில் ஏற்பட்ட கொரானோ பெருந்தொற்று மற்றும் சர்வதேச பொருளாதார சரிவால் கணிப்பொறியியல் (CSE) மற்றும் மின்னணுவியல் & தொடர்பியல் (ECE) துறைகளின் பக்கம் திரும்பியுள்ளனர் . என்றாலும் அனைத்து பிரிவு படிப்புகளுக்குமே சிறப்பான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அரசு, தனியார் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புகள் பொறியியல் கல்விக்கு உள்ளன.* வேலைவாய்ப்பு குறைந்து விட்டதா...பொதுவாக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்தபிறகு உடனடி வேலை, சொந்த தொழில், மேற்படிப்பு என மூன்று விதமான வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்பதை திட்டமிட்டு அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். அனைத்து படிப்பிற்கும் வேலை வாய்ப்பு உண்டு. அனைத்து துறைகளிலும் ஆட்கள் பற்றாக்குறையே நிலவுகிறது. தகுதி, திறமைகளை வளர்த்துக்கொண்டால் அனைவருக்கும் வேலை நிச்சயம் கிடைக்கும்.---------------
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement