dinamalar telegram
Advertisement

கால்நடை மருத்துவர் பணி காலியிடம்; தொகுப்பூதியத்தில் நியமிக்க கோரிக்கை

Share
கால்நடை மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், கால்நடை வளர்ப்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

தமிழக கால்நடை பராமரிப்பு துறையில், 2019ம் ஆண்டு 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ற தொகுப்பூதிய அடிப்படையில், 818 தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்தப்பட்டு 1,097 பேர் தேர்ச்சி பெற்றனர்.இந்நிலையில், 'தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட கால்நடை உதவி டாக்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், பணி ஆணை வழங்க முடியவில்லை.


தேர்வில் வெற்றி பெற்றவர்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய மருத்துவர்களின் பணி காலம் ஆக., மாதம் நிறைவு பெற்ற நிலையில், ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் உள்ளதால், மாநிலம் முழுதும் கால்நடை உதவி மருத்துவர்களின் பணியிடம் காலியாக உள்ளது. கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே, கால்நடை மருத்துவர்கள் போதுமான எண்ணிக்கையில் பணியாற்றி வருகின்றனர். பிற மாவட்டங்களில், 30 முதல் 40 கால்நடை உதவி மருத்துவர்களின் பணியிடம் காலியாக உள்ளது.

இதனால், கால்நடை மருத்துவ உதவியாளர்கள் மூலம் தற்போது சிகிச்சை அளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களும், ஐந்து கால்நடை மருந்தகங்களில் கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டியசூழலில், கால்நடை வளர்ப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கால்நடை பட்டதாரிகள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலாஜி கூறுகையில்,- ''வழக்கு முடியும் வரை, ஏற்கனவே பணி வழங்கப்பட்டதை போல், ஒப்பந்த முறையில் தொகுப்பூதிய அடிப்படையில், மருத்துவர்களை பணி நியமனம் செய்தால், கால்நடை வளர்ப்பவர்கள் பயன் பெற முடியும். ''எனவே, மாநில கால்நடை துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


- நமது நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement