dinamalar telegram
Advertisement

ஊதிய குறைப்பு நோட்டீசை எதிர்த்த பல்கலை ஊழியர் மனுக்கள் தள்ளுபடி

Share
சென்னை : சிதம்பரம் அண்ணாமலை பல்கலை ஊழியர்களுக்கு, ஊதிய குறைப்பு தொடர்பாக அனுப்பிய நோட்டீசை எதிர்த்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2013ல், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ், அண்ணாமலை பல்கலை வந்தது. பல்கலையில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களாக 8,443 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். பதவி மாற்றியமைப்புஅவர்களில், தனி அதிகாரிகளாக பணியாற்றிய பலருக்கு, உரிய கல்வித்தகுதி இல்லை. அதனால் அவர்களின் பதவி மாற்றி அமைக்கப்பட்டது.

பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் 1,110 ஊழியர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது; 7,333 ஊழியர்கள் உபரியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உபரி ஊழியர்களையும்பணியில் தொடர அனுமதித்து, அவர்களின் ஊதியத்தைக் குறைப்பது என, சிண்டிகேட் முடிவு செய்தது.

இதையடுத்து, ஊதியத்தை ஏன் குறைக்கக் கூடாது எனக் கேட்டு, ஊழியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து, ஊழியர்கள் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.அந்த உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு விசாரித்தது. உயர் கல்வித் துறை சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீலகண்டன்; அண்ணாமலை பல்கலை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜராகினர்.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நடவடிக்கை எடுப்பதற்கான காரணம் எழவில்லை என்பதால், விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை எதிர்க்க முடியாது. விளக்கம் பெற்ற பின் அதை பரிசீலித்து, நடவடிக்கையை அதிகாரிகள் கைவிடலாம் அல்லது காரணங்களை நிராகரிக்கலாம்.பிரச்னைஎனவே, நோட்டீசில் குறிப்பிட்டுள்ள திட்டத்துக்கு பதில் அளிக்க, மனுதாரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ் அனுப்பிய நிலையிலேயே இந்த பிரச்னை உள்ளது. அதனால், இரண்டு வாரங்களுக்குள் மனுதாரர்கள் பதில் அளிக்க வேண்டும். பின், சட்டப்படி அண்ணாமலை பல்கலை நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து முகாந்திரங்களையும் பல்கலை முன், மனுதாரர்கள் எழுப்பிக் கொள்ள உரிமை உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவில் தவறு இல்லை. மேல்முறையீட்டு மனுக்களில் தகுதியில்லை; அவை தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement