dinamalar telegram
Advertisement

ரூ.5.50 கோடி இழப்பு; சங்க செயலர் மீது வழக்கு

Share
திருச்சி : திருச்சி கூட்டுறவு கட்டுமான நாணய சங்க செயலராக 2016 - 17ல், பணியாற்றியவர் கார்மேகம், 53. அப்போது,சங்க உறுப்பினர்கள் ஏழு பேருக்கு, அண்ணா நகர் உக்கிர காளியம்மன் கோவில் பகுதியில் இருந்த நிலத்தில், 3,000 சதுர அடியை, அரசு நிர்ணயித்த விலையை விட குறைவாக விற்றுள்ளார்.

இதனால், அரசுக்கு, 5.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இது குறித்த புகாரில், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார், டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையில், செல்வநகரில் உள்ள கார்மேகம் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, 2.70 லட்சம் ரூபாய், 45 சவரன் நகை மற்றும் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கார் ஆகியவை இருந்தன.

இவற்றை, வழக்கின் ஆவணங்களாக பதிவு செய்தனர். இந்நிலையில், கார்மேகம் மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார்மேகம், தற்போது, திருச்சி கருமண்டபம் மத்திய கூட்டுறவு வங்கியில் செயலராக உள்ளார். இதே வழக்கில், சங்கத்தின் தலைவராக இருந்த மோகன் என்பவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • N VADIVEL - namakkal,இந்தியா

    கூட்டுறவு சங்கம் என்பது கூட்டாக எவருக்கும் சந்தேகம் இல்லாத வகையில் கொள்ளை அடிப்பது தான்

Advertisement