dinamalar telegram
Advertisement

ரேஷன் கடை வேலை நேரம் நவம்பர் 1, 2, 3ல் அதிகரிப்பு

Share
சென்னை : தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 1, 2, 3ம் தேதிகளில் காலை 8:00 முதல், இரவு 7:00 மணி வரை ரேஷன் கடைகள் திறக்கப்பட வேண்டும் என, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகள் காலை 9:00 முதல், மதியம் 12:30 மணி வரையும்; பிற்பகல் 2:00 முதல், மாலை 5:00 மணி வரையும் செயல்படுகின்றன. தற்போது பண்டிகை காலம் துவங்கி உள்ளதால், ரேஷன் உணவு பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.குறிப்பாக, ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, அடுத்த மாதம் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து, நவம்பர் 1, 2, 3ம் தேதிகளில் காலை 8:00 முதல், இரவு 7:00 மணி வரை கடைகளை திறந்து, கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்கும்படி, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவுத் துறை, வாணிபக் கழகம் ஆகியவற்றுக்கு, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.அதற்கு ஏற்ப, அனைத்து கடைகளுக்கும் உணவு பொருட்களை முன்கூட்டியே விரைந்து 'சப்ளை' செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement