dinamalar telegram
Advertisement

திருபுவனம் பட்டுக்கு சிறப்பு அஞ்சல் உறை

Share
Tamil News
தஞ்சாவூர் : புவிசார் குறீயிடு பெற்ற திருபுவனம் பட்டு சேலைக்கு, சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தில், பாரம்பரியமிக்க கைத்தறியில் பட்டு சேலைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. பட்டு சேலை ஓரங்களில் இருக்கும் அழகான ஜரிகை வேலைப்பாடுகள், தனித்துவம் பெற்றது. சிறப்பு பெற்ற பட்டு சேலைக்கு, அறிவுசார் சொத்துரிமை மற்றும் தமிழக அரசின் புவிசார் குறியீடு, 2019ல் ஆண்டு கிடைத்தது. நாடு சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் சிறப்பு அஞ்சல் உறையை, தபால் துறை வெளியிடுகிறது.

திருபுவனம் பட்டுக்கான சிறப்பு அஞ்சல் உறையை, நேற்று முன்தினம், தமிழக அஞ்சல் வட்ட இயக்குனர் ஆறுமுகம் வெளியிட, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் பெற்றுக் கொண்டார். தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற சேலம் வெண்பட்டு சேலை, கோவை கோராபட்டு காட்டன், பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கடி சேலை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு.நாகர்கோவில் நகை ஆபரணங்கள், ஈத்தாமொழி நெட்டை தென்னை, மாமல்லபுரம் கற்சிற்பம், காரைக்குடி கண்டாங்கி சேலை, பத்தமடை பாய் ஆகியவற்றுக்கும் அஞ்சல் சிறப்பு உறை வெளியிடப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement