dinamalar telegram
Advertisement

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டூவீலரில் 25,000 கி.மீ., பயணம்

Share
மானாமதுரை-மானாமதுரை சட்டக்கல்லுாரி மாணவர் மணிகண்டன் 19, சாலை பாதுகாப்பை வலியுறுத்தி டூவீலரில் 25,000 கி.மீ., விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தார்.இவர் சாலை விபத்துக்களை குறைக்க விழிப்புணர்வு அளிக்க வேண்டியது அவசியம் என உணர்ந்தார். இதையடுத்து செப்.,3 ம் தேதி இந்தியா முழுவதும் 25 ஆயிரம் கி.மீ., துாரம் சென்று வருவதற்கான டூவீலர் விழிப்புணர்வு பயணத்தை துவக்கினார்.மதுரை, கன்னியாகுமரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களை சுற்றி நேற்று முன்தினம் மானாமதுரையில் பயணத்தை நிறைவு செய்தார். அவருக்கு மாலை அணிவித்து எஸ்.ஐ,. ராமசந்திரன், வழக்கறிஞர் ஊர்க்காவலன் ஆகியோர் மரியாதை செய்தனர். பொதுமக்கள் இவரது சாதனையை பாராட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement