dinamalar telegram
Advertisement

விதிகளை மீறி பெரியாறு கால்வாயில் தடுப்பணை: விவசாயிகள் எதிர்ப்பு

Share
சிங்கம்புணரி--சிங்கம்புணரி அருகே மண் மூடிக்கிடக்கும் பெரியாறு கால்வாயில் தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சிங்கம்புணரி, திருப்புத்துார் பகுதி குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்காக பெரியாறு நீட்டிப்பு கால்வாய் கட்டப்பட்டது.சிறு பிரிவுகளாக ஏரியூர், எஸ்.எஸ்.கோட்டை, திருப்புத்துார் வரை இக்கால்வாய் செல்கிறது. இந்நிலையில் எஸ்.எஸ்.கோட்டை, எருமைப்பட்டி எஸ்.மாத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இக்கால்வாய் மண்மூடி சேதமடைந்துள்ளது.சில இடங்களில் கால்வாய் இருக்கும் இடமே தெரியவில்லை.இந்நிலையில் மழைநீர் கால்வாயில் கட்டப்படும் தடுப்பணை ஒன்றை எருமைப்பட்டி,எஸ்.மாத்துார் ஊராட்சிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மண் மூடிக் கிடக்கும் பெரியாறு கால்வாயை மறித்து நடுவில் கட்டப்பட்டது. இதற்கு பெரியாறு பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து தடுப்பணையில் சில கற்கள் மட்டும் பெயர்த்து எடுக்கப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதிக்கு பெரியாறு தண்ணீர் தொடர்ந்து திறக்கப்படாமலும் கால்வாய் சீரமைக்கப்படாத நிலை உள்ளது. இதில் தடுப்பணை கட்டினால் பெரியாறு கால்வாய் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து விடும் என்று விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.எனவே கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணையை முழுவதும் அகற்றி சீரமைத்து இப்பகுதியை சுற்றி பல இடங்களில் கட்டப்பட்ட தடுப்பணைகள் உரிய முறையில் கட்டப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement