dinamalar telegram
Advertisement

டூவீலர் திருட்டு: 6 பேர் கைது; 11 வண்டிகள் பறிமுதல்

Share
சிவகங்கை-சிவகங்கையில் போலீசாருக்கே சவால் விட்டு அவர்களது டூவீலர்களையே திருடிய 6 பேரை மாவட்ட தனிப்படை எஸ்.ஐ., ரஞ்சித் குழுவினர் கைது செய்து 11 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.சிவகங்கையில் குற்றப்பிரிவு போலீசாருக்கே சவால் விடும் வகையில் தொடர்ந்து ஓய்வு இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் வீடுகள் முன் நிற்கும் டூவீலர்களை திருடி சென்றனர். இதனால் போலீசார் மீதான நம்பிக்கையை சிவகங்கை மக்கள் இழந்தனர்.இதை தவிர்த்திடும் வகையில் டூவீலர் திருடர்களை பிடிக்க மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு தனிப்படை எஸ்.ஐ., ரஞ்சித் தலைமையிலான குழுவினருக்கு எஸ்.பி., செந்தில்குமார் உத்தரவிட்டார்.அதன்படி திண்டுக்கல் மாவட்டம் ராமராஜபுரம் சோனைமுத்து 25, சிவகங்கை காளவாசல் அஜித்குமார் 25, செல்லப்பாண்டி 27, கிருஷ்ணாநகர் சக்கரவர்த்தி 21, நாகராஜ் 23, திண்டுக்கல் பள்ளப்பட்டி அரவிந்த் 21, ஆகிய 6 பேரை கைது செய்து, 11 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement