dinamalar telegram
Advertisement

மாவட்டத்தில் டெங்கு பரவல்... பள்ளி மாணவர்கள் அதிக பாதிப்பு

Share
Tamil News
சிவகங்கை-மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமில் கவனம் செலுத்த கூறியுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் நர்சு, உதவியாளர்களை நியமித்து வீடு தோறும் தடுப்பூசி வழங்கி வருகிறது. அதேநேரம் தற்போதைய சீசனில் பெய்து வரும் மழையால் நீர்நிலைகள், வீட்டு குடிநீர் தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீர் மூலம் டெங்குவை பரப்பும் லார்வா புழுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளன. இதற்காக நியமிக்கப்பட்ட கொசு புழு ஒழிப்பு குழுக்கள் முடங்கி விட்டன.

இதனால் வீடுகள் தோறும் சென்று கொசு புழு ஒழிப்பு பணியும் சுணக்கின. இதன் காரணமாக டெங்குவை பரப்பும் கொசுக்கள் அதிகரித்து நோயை பரப்பி வருகின்றன. குறிப்பாக டெங்கு காய்ச்சலில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காரைக்குடியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒரே நாளில் 5 மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோன்று பள்ளிகளில் மாணவர்கள் கூடுவதன் மூலம் காய்ச்சல் பரவலும் அதிகரிக்கின்றன. இதற்கு பள்ளி வளாகத்தை சுற்றிலும் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றாமல் விட்டுள்ளதால் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு அதிகம் என பெற்றோர் தெரிவிக்கின்றனர். எனவே டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழித்து பாதிப்பில் இருந்து மக்களை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.====
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement