dinamalar telegram
Advertisement

ரூ.14.50 கோடி செலவில் சீரமைப்பு பணிகள்

Share
சிவகங்கை-சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பருவமழை முன் ஏற்பாடு கூட்டத்தில் உப்பாற்றை 14.50 கோடி ரூபாய் செலவில் 40 கி.மீ., துாரத்திற்கு சீரமைக்கப்பட்டுள்ளதாககண்காணிப்பு அலுவலர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் பங்கேற்ற முன் ஏற்பாடு கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார்.கண்காணிப்பு அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்ததாவது:பருவமழை நேரங்களில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மழையின் போது கண்மாய், குளங்கள், ஊரணிகள் உடையாமல் பாதுகாக்க கரைகளை பலப்படுத்த வேண்டும்.நீர் வரத்து கால்வாய்களில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல துார் வாரப்பட வேண்டும். மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும்.சாலையோரங்களில் உள்ள பழுதடைந்த மரங்கள் இருந்தால் அகற்றப்பட வேண்டும். அதிகமான மக்கள் பயன்படுத்தக்கூடிய கட்டுமானங்கள் பழுதடைந்திருந்தால் உடனடியாக சீரமைக்க வேண்டும். பருவமழை நேரங்களில் மின் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரேஷன் கடைகளில் போதுமான உணவுப்பொருட்கள் இருப்பு வைக்க வேண்டும், என அவர் தெரிவித்தார். பின்னர் அவர் நல்லாகுளம் பகுதியில் சருகனியாறு வடிநில கோட்டத்தில் உள்ள உப்பாற்றில் 40 கி.மீ.,க்கு துார் வாரி கரைகளை 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டதையும், படமாத்துார் பொன்னாக்குளம் பாசன கண்மாய்களை பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., மணிவண்ணன், சருகனியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சவுந்திரராஜன், ஆர்.டி.ஓ.,க்கள் சிவகங்கை முத்துக்கழுவன், தேவகோட்டை பிரபாகரன்மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement