dinamalar telegram
Advertisement

குப்பை குளமான ஏரியூர் கண்மாய்

Share
சிங்கம்புணரி--சிங்கம்புணரி அருகே ஏரியூரில் பாசன கால்வாயில் குப்பை கொட்டுவதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இக்கிராமத்தில் உள்ள கற்குளத்து கண்மாயில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குப்பை கொட்டி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பையை முறைப்படி சேகரித்து அப்புறப்படுத்தாததால் கண்மாயிலும், கரையிலும் குப்பை தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.தண்ணீரில் குப்பை கலந்து துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. கண்மாய் கரையில் கொட்டப்படும் குப்பை மழையின் போது தண்ணீரில் அடித்து வரப்பட்டு அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி முன்பு தேங்கிவிடுகிறது. இதனால் தினமும் குப்பையை அப்புறப்படுத்துவது ஆசிரியர்களுக்கு பெரிய வேலையாகஉள்ளது.எனவே கண்மாயில் கரையிலும் குப்பை கொட்டாதவாறு ஏரியூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement