dinamalar telegram
Advertisement

மாநில குழு போட்டியில் ஆக்ஸிலியம் பள்ளி முதலிடம்

Share
காளையார்கோவில்--மாநில குழு போட்டிகளில் புலியடிதம்மம் ஆக்ஸிலியம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.கரூரில் பள்ளி மாணவர்களுக்கான மாநில குழு போட்டி நடந்தது. இதில் இப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.14வயதிற்குட்பட்ட ஆண்கள் கைப்பந்து போட்டியில் 6:3 என்ற புள்ளி கணக்கில் சென்னையை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டத்தில் அருள்ஆனந்தராஜ், நீளம் தாண்டுதலில் ஸ்ரீதர், 17 வயது பிரிவு ஆண்கள் எறிபந்து போட்டியில் 30:25 என்ற புள்ளி கணக்கில் இப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ரெஜினாமேரி, தலைமை ஆசிரியை பவுலின், உடற்கல்வி ஆசிரியர் சரோத்குமார் பாராட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement