dinamalar telegram
Advertisement

பயன்படாத நூலகம்; சுத்தம் இல்லா தொட்டி; கோபத்தின் உச்சியில் கோவிலாங்குளம் மக்கள்

Share
அருப்புக்கோட்டை,பயன்படாத நுாலகம், சுத்தம் இல்லா குடிநீர் தொட்டி , சாக்கடை இன்றி தேங்கி கிடக்கும் கழிவு நீர் என அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் மக்கள் பல ஆண்டுகளாக அல்லல்படுகின்றனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கோவிலாங்குளம் ஊராட்சி. ஒரு காலத்தில் இதை குட்டி சிங்கப்பூர் என்பர். இந்த ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலோர் சிங்கப்பூரில் பணியில் இருந்தனர். ஆனால் சிங்கப்பூரில் உள்ள சுத்தம் இங்கு கொஞ்சம் கூட இல்லை என்கின்றனர் இங்குள்ளோர். ஊரில் மெயின் பஜாரிலிருந்து மயானம் வரை சாக்கடை இல்லை. இதனால் கழிவு நீர் ஆங்காங்கு தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது. ஊரில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தொட்டி 30 ஆண்டுகளை கடந்து விட்டது. மராமத்து செய்து டேங்கை சுத்தம் செய்ய வேண்டும்.ஊரில் உள்ள நுாலகம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்குள்ளதால் பூட்டியே கிடக்கிறது. நுாலகம் இருந்தும் பயன் இல்லை என்கின்றனர் மக்கள் .கால்நடை மருத்துவமனை சிறியதாக உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து விடுகிறது. கால்நடை மருத்துவமனை புதியதாக கட்டப்பட வேண்டும். ஆதி திராவிடர் காலனி பகுதியில் போர்வெல் அமைத்து புழக்கத்திற்கு தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.ஊரில் உள்ள நிழற்குடை சேதமடைந்து கிடக்கிறது. அதை இடித்து புதியதாக கட்ட வேண்டும். ஊரில் பழமையான நுாற்றாண்டு புகழ் வாய்ந்த பெருமாள் கோயில் சேதமடைந்து, இடியும் நிலையில் உள்ளது. இங்குள்ள சமணர் கால கோயில் பின்புறம் குடிமகன்கள் குடித்து விட்டு கும்மாளமிடுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement