dinamalar telegram
Advertisement

அதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய தேர்கள் வடிவமைப்பு

Share
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் அதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய தேர் வடிவமைப்பு மற்றும் பழைய தேர் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பகுதியில் ஹனேஷ் இன்ஜி., தேர் பட்டறை எனும் தேர் வடிவமைப்பு கூடம் உள்ளது. இங்கு கடந்த 30 ஆண்டுகளாக இலுப்பை மரத்தில் அழகிய வேலைப்பாடுகள், இரும்பு அச்சுக்களில் பிரேக்குடன் கூடிய சக்கரங்களைப் பொருத்தி புதிய தொழில்நுட்பத்துடன் தேரினை வடிவமைக்கின்றனர்.இந்த தேர்களை சுலபமாக திருப்பவும் கையாளவும் முடியுமென்பதால் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.பல்வேறு அளவுகளில் 100 ஆண்டுகளுக்கு மேலாக உழைக்கக்கூடிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தேர் செய்யும் பணியில் பிரகாஷ்,43; என்பவர் ஈடுபட்டு வருகிறார்.இங்கு ரூ.4 லட்சம் மதிப்பில் நான்கரை அடி அகலம், 21 அடி உயரம் கொண்ட தேர், பன்னிெரண்டரை அடி அகலத்தில் 37 அடி உயரம் கொண்டது வரை பிரம்மாண்ட தேர்களின் சக்கரங்களை சுலபமாக வளைக்கவும், பிரேக் பிடித்து நிற்க வைக்கவும் முடியும் வகையிலான தொழில்நுட்பத்துடன் தேர்கள் வடிவமைத்து தரப்படுகிறது.பல ஆண்டுகள் பராமரிப்பின்றி பழுதடைந்து கிடக்கும் பழைய தேர்களையும், அதன் வடிவம் மாறாமல் மர அச்சுக்களை மாற்றி, இரும்பு அச்சுக்களை பொருத்தி புதிய தொழில்நுட்பத்தில் தயார் செய்கின்றனர்.பழைய சிற்பங்களை மெருகேற்றி பொருத்தித் தருவதால் பழைய தேர்கள் வடிவம் மாறாமல், புதிய தேர்களாக மாற்றப்பட்டு வருகிறது.இரும்பினாலான தேர்ச்சக்கரங்கள் இங்கு தயார் செய்யப்படுகிறது. 5 அடி அகலம் முதல் 15 அடி அகலம் வரையிலான இரும்புச்சக்கரங்கள் தேர்களின் அளவுக்கு ஏற்றார்போல் இங்கே தயார் செய்யப்படுகிறது.புதிதாக வடிவமைத்த தேராக இருந்தாலும், பழைய தேர்களை புதிப்பித்தாலும் மூன்று ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிப்பு செய்து தருகின்றனர். சக்கரங்களுக்கு கிரீஸ் ஏற்றுதல் மற்றும் மேற்புற கோபுர வடிவங்களை வலுப்படுத்துவது போன்ற பராமரிப்புகள் அனைத்தையும் இலவசமாக செய்து கொடுக்கின்றனர்.இந்த தேர்களை எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு இரும்பு அச்சுக்களில் லாரி டயர்களை பொருத்தி தேவைப்படுவோர்களின் பகுதிகளுக்கு நேரில் கொண்டு செல்கின்றனர். தேரோடும் வீதிகள் வழியாக தேர்களை சோதனை ஓட்டம் நடத்தி காண்பிக்கின்றனர்.தேர்களை அந்தந்த பகுதிகளுக்கே சென்று தயாரித்துக்கொடுக்கும் கட்டமைப்புகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்பு எண்: 99761 62384 ஆகும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement