dinamalar telegram
Advertisement

நல்லாட்சியால் உள்ளாட்சியில் வெற்றி தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் பெருமிதம்

Share
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற ஐந்து மாதத்தில் அக்கட்சிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரும் அங்கீகாரம் உள்ளாட்சியில் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு என, விழுப்புரம் மத்திய மாவட்ட துணைச் செயலாளர் முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:தி.மு.க., வின் அடிமட்டத் தொண்டனாக இருந்த என்னை மாவட்ட துணைச் செயலாளராக பரிந்துரை செய்த அமைச்சர் பொன்முடி, நியமனம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.கடந்த 5 மாத கால தி.மு.க., ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியாக சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத பல திட்டங்களையும் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அமைச்சர் பொன்முடி தெரிவித்த தேர்தல் வாக்குறுதியில் முக்கியமாக திருக்கோவிலுார் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக மேம்படுத்துவது, தொகுதியில் புதிய அரசு கலைக் கல்லுாரியை கொண்டுவருவது என யாரும் எண்ணிப்பார்க்க முடியாத சாதனையை அமைச்சர் நிறைவேற்றியுள்ளார்.இந்த ஐந்து மாத கால ஆட்சியில் முதல்வரின் வழிகாட்டுதலுடன், அமைச்சர் பொன்முடியின் தீவிர செயல்பாட்டால் திருக்கோவிலுார் தொகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது.மக்கள் இந்த அரசுக்கும், முதல்வர், அமைச்சருக்கும் வழங்கியிருக்கும் நற்சான்றிதழாகும். திருக்கோவிலுார் நகரின் வளர்ச்சிக்காகவும், எனக்கு மாவட்ட துணைச் செயலாளராக பணியாற்ற வாய்ப்பளித்த அமைச்சர் பொன்முடி, மாவட்டச் செயலாளர் புகழேந்தி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து நகர மக்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன்.இவ்வாறு முருகன் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement