dinamalar telegram
Advertisement

ஷாரூக் மகன் ஜாமின் மனு மீது 20ம் தேதி தீர்ப்பு

Share
மும்பை : போதைப் பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யானின், 'ஜாமின்' மனு மீதான தீர்ப்பு, 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு, சொகுசு கப்பல் சமீபத்தில் சென்றது. அதில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யான் கான் மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர்.அப்போது தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர் ஆர்யான் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் ஜாமின் கோரி ஆர்யான் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி, ஆர்யான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான இரு தரப்பு வாதங்கள் நேற்று முடிந்த நிலையில், தீர்ப்பை 20ம் தேதிக்கு நீதிபதி வி.வி.பாட்டீல் ஒத்திவைத்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (18)

 • சம்பத் குமார் -

  1). போதை பொருட்கள் ஒழிப்பு துறைக்கு இன்னும் கூடுதலாக காவலர்கள் மற்றும் அதிகாரிகளை இந்தியா முழுவதும் நியமிக்க வேண்டும்.2). இதற்கான தனி நீதிமன்றங்கள் அல்லது குறைந்து நீதிபதிகளாவது நியமிக்க வேண்டும்.3). இந்திய அளவில் இதில் ஒருங்கிணைப்பு தேவை. 4). ஒரு தனியாக இணை அமைச்சர் இதற்கென்று மற்றும் கூடுதலாக வேற தேச விரோத செயல்களை நேரிடையாக கையாளும் விதத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்..5). ஆர்யான்கான் பொருத்தவரை சட்டம் தன் கடமையை செய்தால் போதுமானது. வேறு ஒன்றையும் இந்திய மக்கள் எதிர்ப்பார்க்கவில்லை. நன்றி ஐயா.

 • sundarsvpr - chennai,இந்தியா

  ஜாமீன் வழங்குவதில் தீர்ப்பு வழங்க காலதாமதம் ஏன் என்பது விந்தையாய் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை ஒரு பிரபலமானவர் என்பதால் அல்ல. போதை பொருள் கடத்தல் வைத்துஇருந்தல் சர்வ தேச பிரச்னை அரசு தரப்பின் வாதம் போதுமானது இல்லை என்றால் வழக்கின் உண்மைத்தன்மை வெளிவர தீர்ப்பில் தான் அறியமுடியும்

 • ravikumark - Chennai,இந்தியா

  How come no news emerging on his blood samples....similarly

 • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

  இதையே இவன் அரபு நாடுகளில் செய்திருந்தால் இன்னேறம் இவன் தலை இருந்திருக்காது. புனித பாரத தேசதில் நன்றி உணர்வுடன் அமைதியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

 • Ramesh Sargam - Bangalore,இந்தியா

  இந்தியாவில் முதல்முறை ஒரு பிரபலத்தின் வாரிசுக்கு ஜாமீன் மீண்டும் மீண்டும் மறுக்கப்படுகிறது. பலே பலே. இப்படித்தான் நீதித்துறை செயல்படவேணும். யாருக்கும், எந்த கொம்பனுக்கும் நீதித்துறை அடிபணிய கூடாது. வாழ்த்துக்கள் நமது நீதி துறைக்கு.

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   Ramesh ஜி, ஜாமீன் தீர்ப்புபோலவே, இவனின் தண்டனை தீர்ப்பும் இருக்கணும். இவனின் அப்பனை எதுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் தடுத்தாங்க என்று இப்பதான் புரியது. ஒருவர் போதைப்பொருள் பாவித்தால் ஒரு வாரத்துக்குமேல் அவர் அப்போது அவருடன் இருந்த பொருட்கள் (உதாரணம் அவரின் கைக்கடிகாரம், சப்பாத்து, அவரின் பணம் மற்றும் க்ரெடிட், வாங்கி அட்டைகள் ) நகோடின் Swap டெஸ்ட் செய்தால் Positive என்று அதாவது போதைப்பொருள் அவர் உடலில் சம்பந்தப்பட்டுள்ளது என்று காட்டும்.

Advertisement