dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க., தலைவர்கள் அறிக்கை:அமைச்சர் பெரியகருப்பன் கிண்டல்

Share
சென்னை;'குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, அ.தி.மு.க., தலைவர்கள் வெளியிட்ட அறிக்கை இருக்கிறது' என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும், 28 மாவட்ட இடைத்தேர்தல் சிறப்பான முறையில், நடுநிலையோடு நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஐந்து ஆண்டு கால ஆட்சிக்கு, அங்கீகாரம் தந்து ஊக்குவிக்கும் வகையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை மக்கள் தந்துள்ளனர்.இதைத் தாங்கி கொள்ள முடியாமல், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், தங்களது கட்சிக்கு மக்கள் தந்த படுதோல்வியை மறைத்துள்ளனர். தேர்தல் ஆணையத்தை கொச்சைப்படுத்தி உள்ளனர்.அ.தி.மு.க., நடத்த தவறிய உள்ளாட்சி தேர்தலை, தற்போது தி.மு.க., அரசு நடத்தி இருக்கிறது. பத்து ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில், மாநில தேர்தல் ஆணையத்தை தங்கள் கைப்பாவையாக ஆட்டிப் படைத்த பழைய ஞாபகத்தில், இந்த கற்பனை குற்றச்சாட்டை வழங்கியுள்ளனர்.குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, அவர்களது அறிக்கை இருக்கிறது. தோல்வியை ஒப்புக்கொள்ளவும், மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவும் இருவருக்கும் மனமில்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement