dinamalar telegram
Advertisement

மின் இணைப்பு பெயர் மாற்ற தாமதம்: ரூ.1,000 இழப்பீடு வழங்க உத்தரவு

Share
சென்னை:மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்து தர தாமதமானதால், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு 1,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு, மின் வாரியத்திற்கு மின்சாரஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.விழுப்புரம் மாவட்டம் வளவனுாரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், இரு மின் இணைப்புகளை தன் பெயருக்கு மாற்றம் செய்து தரக் கோரி, கண்டமங்கலம் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார்.குறித்த காலத்தில் பெயர் மாற்றம் செய்யாததால், விழுப்புரம் மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில், மனுதாரர் முறையிட்டார். உரிய தீர்வு கிடைக்காததை அடுத்து, அவர் ஒழுங்குமுறை ஆணையத்தின் குறை தீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்துள்ளார்.அதற்கு, எதிர் மனுதாரரான மின் வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த பின், குறைதீர்ப்பாளர் தேவராஜன் பிறப்பித்த உத்தரவு விபரம்:மின் இணைப்புகள் பெயர் மாற்றம் கோரி, 2020 ஜூன் 6ல் கடிதம் வாயிலாக மேல்முறையீட்டாளர் மனு செய்துள்ளார். அவர், அபராதத்துடன் மின் கட்டண நிலுவைத் தொகையை செலுத்த தயாராக இருந்தும், இந்நாள் வரை மின் இணைப்புகள் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.ஆகையால், மின் பகிர்மான செயல்திற விதிகளின்படி, அதிகபட்ச இழப்பீடாக, மேல்முறையீட்டாளருக்கு 1,000 ரூபாயை எதிர் மனுதாரர் வழங்க ஆணையிடுகிறேன்.மின் நிலுவைக் கட்டணத்தை, விதிகளின்படி மேல்முறையீட்டாளர் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய ஏழு நாட்களுக்குள், விவசாய மின் இணைப்புகளை எதிர் மனுதாரர் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement