dinamalar telegram
Advertisement

ஒய்.ஜி.மகேந்திரன் மகள் வீட்டிற்கு, சீல்

Share
சென்னை:தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனை திரும்ப செலுத்தாததால், நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டிற்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.பிரபல நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். இவரது மகள் மதுவந்தி, 43. இவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை, வீனஸ் காலனி, 2வது குறுக்குத் தெரு, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. இந்த வீட்டை 2016ல், இந்துஜா லேலண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனத்தில், கடன் பெற்று வாங்கியுள்ளார்.வாங்கிய கடனில், 1.21 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தாமல், மதுவந்தி தொடர்ந்து பைனான்ஸ் நிறுவனத்தை அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, அந்த பைனான்ஸ் நிறுவனம், 2018ல் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது நீதிமன்றம், மதுவந்தியின் வீட்டை, 'ஜப்தி' செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.போலீசார் தாமதப்படுத்தியதால், ஜப்தி நடவடிக்கை தள்ளிப் போனதாக கூறப்படுகிறது. இக்காரணத்தை தெரிவித்ததால், நீதிமன்றம் மதுவந்தியின் வீட்டிற்கு, 'சீல்' வைக்க உத்தரவிட்டது.இதன்படி நேற்று முன்தினம், மதுவந்தியின் வீட்டிற்கு, நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் போலீஸ் எஸ்.ஐ., ரத்தினகுமார் உள்ளிட்டோர் சீல் வைத்தனர். அப்போது, 'அடுத்த மாதம் பணம் கட்டி விடுகிறேன். தயவு செய்து சீல் வைக்க வேண்டாம்' என, அதிகாரிகளிடம் மதுவந்தி கெஞ்சினார்.அதிகாரிகள் ஏற்க மறத்து சீல் வைத்தனர். வீட்டிற்கான சாவி, பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மதுவந்தி தற்போது, பா.ஜ.,வில் நிர்வாகியாக உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • விஜய் -

    இவங்க உறவுக்கார அம்மணி லதா ரஜினிகாந்த் கூட இதே மாதிரி தான் அடிக்கடி சேதி வருது...

Advertisement