dinamalar telegram
Advertisement

துப்பாக்கியால் சுட்டபாதுகாவலர்கள்

Share
சித்ரதுர்கா:சாசலு கிராமத்தில், கோவில் வளாகம் அருகில், ஆயுத பூஜை நடந்த பின், செக்யூரிட்டிகள் இருவர், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர்.

சித்ரதுர்காவின், சாசலு கிராமத்தில் பூதப்பன கோவில் அருகில், ஆயுத பூஜையை முன்னிட்டு, நேற்று மதியம் செக்யூரிட்டி நிறுவனத்துக்கு சொந்தமான வாகனங்கள், ஏ.டி.எம்., இயந்திரத்துக்கு, பணம் நிரப்பும் வாகனங்களுக்கு பூஜை செய்தனர். பூஜை முடிந்த பின், இரண்டு செக்யூரிட்டிகள், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். இந்த போட்டோ வைரலாக பரவியுள்ளது. இது போன்று சுடுவது குற்றமாகும். இவ்விரு செக்யூரிட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement