dinamalar telegram
Advertisement

100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை ஹம்பியில் தேசிய கொடி ஜொலிப்பு

Share
விஜயநகரா:நம் நாட்டில், 100 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைத்ததை போற்றும் வகையில், ஹம்பி புராதன நினைவு சின்னங்கள் மூவர்ண மின் விளக்குகளால் ஜொலிக்கின்றன.

நம் நாட்டில், கடந்த ஜனவரி 16 முதல், நேற்று வரை, 100 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.அதை போற்றும் வகையில், விஜயநகர பேரரசர்கள் ஆண்ட யுனேஸ்கோ புராதன நினைவு சின்னமான, ஹம்பி கல் தேர், விஜய விட்டல கோவில், யானை கால் மண்டபம் போன்றவைகளுக்கு மூவர்ணங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

இதை பார்க்க சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர். பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தன் மனைவி ஷில்பாவுடன் ஹாயாக ஹம்பியை சுற்றி பார்த்தார்.விடுமுறை நாட்கள் என்பதால் சுற்றுலா பயணியரை கருத்தில் கொண்டு, இந்த மூவர்ண மின் விளக்குகள், வரும், 17 வரை எரியவைப்பதற்கு, இந்திய தொல்லியியல் துறையினர் தீர்மானித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement