dinamalar telegram
Advertisement

ஊட்டி மலை ரயில் மீண்டும் துவக்கம்

Share
மேட்டுப்பாளையம்:ஊட்டி மலைரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு சீரமைக்கப்பட்டதால், நேற்று முதல் மீண்டும் மலை ரயில் ஓடத்துவங்கியது.மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, தினமும் மலை ரயில் இயக்கப்படுகிறது. கடந்த, 9 ம் தேதி பெய்த கனமழையால் கல்லாறு - ஹில்குரோவ் இடையே, இரு இடங்களில் மண் சரிவும், பாறைகளும் உருண்டு விழுந்தன.இதனால் ஊட்டி மலைரயில், 10, 11, 12, 13 ஆகிய நான்கு நாட்கள் ரத்து செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் இயந்திரம் வாயிலாக, ரயில் பாதையில் உள்ள மண்சரிவை சீரமைத்தனர். இதையடுத்து, நேற்று காலை, 7:10 மணிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement