dinamalar telegram
Advertisement

நமக்கு நாமே திட்ட பணிகள் :தன்னார்வலரை தேடும் அதிகாரிகள்

Share
அவிநாசி;'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், கட்டமைப்புகளை பலப்படுத்திக்கொள்ள, அரசு துறையினர், தன்னார்வலர்களைத் தேட துவங்கியுள்ளனர்.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், வளர்ச்சிப்பணி மேற்கொள்ள, அரசு அனுமதி வழங்கியுள்ளது.பொதுமக்களின் பங்களிப்புடன், நீர்நிலை புனரமைப்பு, விளையாட்டு திடல் அமைப்பு, தெரு விளக்கு பொருத்துதல், பூங்கா உருவாக்கம் மற்றும் மேம்பாடு, எல்.இ.டி., விளக்கு கம்பங்கள், 'சிசிடிவி' கேமரா பொருத்துதல், பாதுகாப்பு வளையங்களுடன், மரக்கன்று நடுதல், அரசு பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டடங்களில், சுற்றுச்சுவர் மற்றும் பிற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் போன்ற பணிகளை செய்து கொள்ள முடியும். திட்ட மதிப்பீட்டு தொகையில், பொதுமக்கள் பங்களிப்பாக, மூன்றில் ஒரு பங்கு தொகை செலுத்த வேண்டும். எஞ்சிய தொகையை, அரசு வழங்கும்.பெரும்பாலான அரசு துவக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், நுாலகம், அரசு மாணவர் விடுதி உள்ளிட்ட அரசு கட்டடங்களில், அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. பல இடங்களில் கூடுதல் கட்டடம் தேவைப்படுகிறது.இப்பணிகளுக்கென, அரசின் பிரத்யேக நிதி ஒதுக்கீடு இல்லாததால், அரசு அதிகாரிகள், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், பணிகளை செய்து முடிக்க திட்டமிட்டு வருகின்றனர்.அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை பெற, தன்னார்வ நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட நன்கொடையாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement